கிளிநொச்சியில் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

images 15
images 15

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

இன்று (திங்கட்கிழமை) காலை முதல் கன மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிப்பை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.