யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இரு புத்தாக்க ஆய்வு கூடங்கள் திறப்பு!

IMG 3267
IMG 3267

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

IMG 3270
IMG 3270

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று(25) காலை இடம்பெற்றது.

IMG 3269
IMG 3269

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடதிபதியுமான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், ஏகெட் திட்டத்தின் நிதிப் பணிப்பாளர் க. கனகரட்ணம், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி தி. பத்மதாஸ், இரசாயனவியல் துறைத் தலைவர் கலாநிதி பி.ஐங்கரன், மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் எளிமையாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

image 6483441 1
image 6483441 1

அரிசோனா அரச பல்கலைக்கழகம் – அமெரிக்கா, சால்மேர்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் – சுவீடன், தேசிய விஞ்ஞான நிறுவனம் – கண்டி, விஞ்ஞானபீடம் யாழ் பல்கலைக்கழகம் என்பவற்றின் கூட்டு ஆராய்ச்சித்திட்டமாக எளிதில் கிடைக்கக்கூடிய சோடியம் மற்றும் மக்னீசியத்தினை பயன்படுத்தி புத்தாக்கமாக பல சவால்களை எதிர்கொண்டு மேம்பாடான உற்பத்திச் செலவு குறைந்த எளிதில் கிடைக்கக்கூடிய பற்றரிகளின் தொழில்நுட்பமானது வடிவமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.