காவற்துறை மா அதிபராக பொறுப்பேற்றார் விக்ரமரத்ன

d007daa15e3caa7f952776d97baf7d35 XL
d007daa15e3caa7f952776d97baf7d35 XL

சி.டி.விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது காவற்துறை அதிபராக காவற்துறை தலைமையகத்தில் சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.

சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள காவற்துறை மா அதிபர் பதவிக்கு, பதில் காவற்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரையை ஆராய்ந்த பாராளுமன்ற பேரவை இலங்கை காவற்துறை திணைக்களத்தின் 35 ஆவது காவற்துறை மா அதிபராக, தற்போதைய பதில் காவற்துறை மா அதிபரான சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க அனுமதி வழங்கியது.

இந் நிலையிலேயே அவர் இன்றைய தினம் தனது புதிய பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில், கடமைகளையும் பொறுப்பேற்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காவற்துறை மா அதிபராக இருந்த  பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில், அவ் விடுமுறையில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். 

அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டது முதல் சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தற்போதுவரை பதில் காவற்துறை மா அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.