கார்த்திகைத் தீபமேற்றுவது என் மதம் சார்ந்த உரிமை-யாழ் பல்கலைக்கழக மாணவன்

vlcsnap 2020 11 30 07h35m01s451

பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் .யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் எனும் மாணவனே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்

இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் மசகையா தர்ஷிகன் கருத்துத் தெரிவிக்கையில்

காவற்துறையினரின் தெளிவின்மை காரணமாக அதாவது காவற்துறையினர் ஏற்கனவே மாவீரர் நினைவு நாளுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்கள் பொதுமக்களை கூட்டி பொது இடங்களில் மாவீரர்களை நினைவு கூறவே தடை விதித்திருந்தார்கள்

இன்று எங்கள் இந்து காலாச்சார முறைப்படி முக்கியமான ஒரு நாள் கார்த்திகைத் தீபம் ஏற்றுதல் இதனை நாங்கள் கோவில்களில் ,வீடுகளில் ,பாடசாலைகளில், விளையாட்டு மைதானங்களில், எல்லா இடங்களிலும் சின்ன வயதிலிருந்தே அனுஷ்ட்டித்து வருகின்றோம்

இன்று கார்த்திகைத் தீபத்தினை பல்கலைக்கழகங்களில் ஏற்ற முடியாது? என்ற சூழல் ஏற்பட்டது ஏன் எனின் நாங்கள் பல்கலைக்கழகத்தில் மாவீரகளை நினைவு கூர போகிறோம் என்று அந்த இடத்தில் காவற்துறையினரின் கெடுபிடி இருந்தது

நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எது சரி எது பிழை என்று விளங்கி செய்யக்கூடிய மாணவர்கள் என்னுடைய மனநிலைப்படி என்னுடைய அறிவுக்குட்படுத்தப்பட்டபடி இன்று கார்த்திகை தீபத்தை ஏற்றுவது என் பிழையோ சட்டத்திற்கு முரணான செயலாகவோ நான் கருதவில்லை என் மதம் சார்ந்த உரிமையாகவே காணப்படுகின்றேன் என்றும் அம் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.