புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வவுனியாவில் முறிந்து வீழ்ந்தன மரங்கள் !

IMG 20201202 173854 1
IMG 20201202 173854 1

புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வவுனியாவில் இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.வடக்கு கிழக்கில் புரவி சூறாவளியின் தாக்கம் ஏற்படும் என்ற நிலையில் வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆலயம் ஒன்று சேதமாகியுள்ளது.

 இன்று பிற்பகல் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று ஆலயத்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆலயம் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இதேவேளை வவுனியா புதுக்குளம் பகுதியில் வேம்பமரம் ஒன்று மின்சார கம்பத்தின் மீது முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து விரைவாக செயற்பட்ட கிராமவாசிகள் முறித்த மரத்தினை வெட்டி அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20201202 173754
IMG 20201202 173754
IMG 20201202 173649
IMG 20201202 173649
IMG 20201202 173728
IMG 20201202 173728
IMG 20201202 173658 1
IMG 20201202 173658 1
IMG 20201202 173658 1 1
IMG 20201202 173658 1 1
IMG 20201202 173715
IMG 20201202 173715