புரவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

mullaitivu 10 1 1
mullaitivu 10 1 1

வங்களா விரிகுடாவில்ஏற்பட்ட புரவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று (02)காலை முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன், நேற்றைய தினம் மாலை முதல் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் இன்றும் மழை பெய்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் துணுக்காய்,மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த 02/12/2020 காலை 06, மணியிலிருந்து 03/12/2020 காலை 06, மணி வரையிலான 24, மணி நேரத்தில் கிடைக்கப் பெற்ற அதி கூடிய மழை வீழ்ச்சி அம்பலப் பெருமாள்குள நீரேந்து பிரதேசத்தில் 392, மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.

இதே வேளை,வவுனிக்குளம் நீரேந்து பிரதேசத்தில் 282, மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், ஐயங்கன்குளம் நீரேந்து பிரதேசத்தில் 344, மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பனங்காமம் குளம் நீரேந்து பிரதேசத்தில் 245, மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கல்விளான் நீரேந்து பிரதேசத்தில் 186, மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத் தின் கீழ் உள்ள 12, பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் 06, நீர்ப்பாசனக் குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளது.இதேவேளை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத் தின் கீழ் உள்ள மருதமடுகுளம் மற்றும் கணுக்கேணிகுளம் ஆகிய இரண்டு குளங்கள் வான் பாய்ந்து வருவதோடு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது

இதேவேளை மருதங்குளம் குளம் ஏற்கனவே உடைத்திருந்த நிலையில் குறித்த குளம் தற்காலிகமாக நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான நீர் தேக்கமுடியாத நிலையில் நீர் வெளியேற்றப்படுகிறது இதனால் கொக்காவில் துணுக்காய் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியூடாக தடைப்பட்டுள்ளது

இவ்வாறு கன மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை மரங்கள் முறிந்து விழுந்து வீதி தடைகள் ஏற்பட்டதோடு அவை சீர்செய்யப்பட்டு வருகின்றன

இதேவேளை தற்காலிக வீடுகளில் இருந்த குடும்பங்கள் பல கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்

இதேவேளை கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டதோடு கடல் நீர் பல இடங்களில் கிராமங்களுக்குள் வந்ததோடு கடற்கரையில் மீனவர்களின் வாடிகள் மீன்பிடி உபகரணங்கள் வள்ளங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளது

இதேவேளை முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் கடற்கரைக்கு மிக அண்மையாக இருந்த சுமார் 440 பேர் நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தாங்கவைக்கப்பட்டு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுவருகிறது

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர்ப் பகுதிக்குள் நுழைவதற்கு அண்மையாக உள்ள சின்னாற்றுப்பாலத்தில் நீர் நிறைந்துள்ள நிலையில் கடலுக்கு அது வெட்டிவிடப்படாத நிலையில் குறித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு இருந்தது இதனால் இன்று காலை குறித்த பகுதி நீரை வெட்டி கடலுடன் விடுவதற்கு மக்கள் முயன்றபோது கடல் நீர் உள்ளே வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்து காவற்துறையினர் அதை தடை செய்திருந்தனர் இதுதொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கும் வரை வெட்டிவிடவேண்டாம் என்றனர்

குறிப்பாக குறித்த பகுதியில் நீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் மாவட்டத்தின் நகர் பகுதிக்கு வருவதற்கு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர் இது தொடர்பாக இன்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

mullaitivu 8
mullaitivu 8
mullaitivu 10 1
mullaitivu 10 1
mullaitivu 10
mullaitivu 10
mullaitivu 2
mullaitivu 2
mullaitivu 7 1
mullaitivu 7 1
mullaitivu 9
mullaitivu 9
mullaitivu 9 1
mullaitivu 9 1
mullaitivu 6
mullaitivu 6
mullaitivu 5
mullaitivu 5
kokkilaai 7
kokkilaai 7
mullaitivu 4
mullaitivu 4
mullaitivu 4 1
mullaitivu 4 1
kokkilaai 3
kokkilaai 3
mullaitivu 7
mullaitivu 7