முல்லைத்தீவு மாவட்டத்தில் 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

maanthai east 5
maanthai east 5

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் குறித்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகப்படியாக 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகப்படியாக துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாள் நிலப்பகுதிகள் எங்கும் வெள்ளம் காணப்படுவதோடு குளங்கள் வான் பாயும் நிலையில் போக்குவரத்து இடர்பாடுகளும் காணப்படுகிறது.

மாந்தை கிழக்கில் உழுவன் ஏரிக்குளம் ஒன்று உடைப்பெடுத்துள்ளது இதனால் சிறாட்டிகுளம் கிராமத்திற்கான போக்குவரத்து இன்று நண்பகல்(12.00 மணிவரை) தடைப்பட்டு இருந்து. தற்போது வெள்ளம் வடிந்தோட தொடங்கியுள்து.

பறங்கி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் ஆற்றினை அண்டிய இருபக்க வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கில் ஆறு குளங்கள் வான்பாய்கின்றன. கிராமத்திற்குள் புகுந்த மழைவெள்ளத்தினை பிரதேச செயலக மற்றும் பிரதேச சபையினர் இணைந்து வடிகால் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.