வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

rein

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித் தியாலத் துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளியானது வலுவிழந்து தாழமுக்கமாக இந்தியாவின் தென்பகுதி கரையை அடைந்துள்ளது.

எனினும் இதன் தாக்கம் தொடர்ந்து காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழை யுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக் கப்பட்டுள்ளது.