வவுனியாவில் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு!

DSC06002
DSC06002

சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை பலகைகளை வவுனியா குருமன்காடு பகுதியில் வைத்து இன்று(05) புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது.

இது பற்றி தெரியவருவதாவது,

வவுனியா பாலமோட்டையில் இருந்து முதிரை பலகைகள் கடத்தப்படவிருப்பதாக புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் அபயசேகரவின் வழிநடத்தலின் கீழ், புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினராலேயே குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது 37 முதிரை பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியதோடு இக்கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டு வவுனியா வன வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.