நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல்லுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

61028fc353554ca4b2c90f23bb892d96 720x450 1
61028fc353554ca4b2c90f23bb892d96 720x450 1

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவர் ஜேஸன் ஹோல்டரை திட்டிய நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேரில் மிட்செல்லுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை, அபராதம் விதித்துள்ளது.

போட்டியின்போது கடந்து சென்ற ஹோல்டரை, டேரில் மிட்செல், ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார். இந்த சம்பவம் போட்டி நடுவரிடம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய ஐசிசி நடுவர், டேரில் மிட்செல்லுக்கு 15 சதவீத அபராதத்துடன், இடைநீக்கத்துக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளார்.

மைதான நடுவர் அளவிலான குற்றம் என்பதால் அதிகப்பட்சம் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும், இடைநீக்கத்துக்கான 2 புள்ளிகள் வரை வழங்கவும் விதிமுறை உள்ளது.

டேரில் மிட்செல் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என ஐசிசி நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்துள்ளார்.