இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்கும் நியூசிலாந்து

eng vs anz
eng vs anz

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்ட நியூலாந்து அணி பலமான நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் 350 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 91 ஓட்டங்களையும், டென்லி 74 ஓட்டங்களையும், பேன்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் டிம் சௌதி 4 விக்கெட்டுக்களையும், வோக்னர் 3 விக்கெட்டுக்களையும், கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுக்களையும், போல்ட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 371 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டு வருகிறது.

நியூசிலாந்து அணி சார்பில் வொட்லிங் 105 ஓட்டங்களையும், கிராண்ட் ஹோம் 65 ஓட்டங்களையும், வில்லியன்சன் 55ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.