சாதனையை தகர்க்க இன்னும் வாய்ப்புள்ளது

lara
lara

அதிரடியாக துடுப்பெடுத்தாடவல்ல டேவிட் வோர்னரிற்கு, தனிநபரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான 400 எனும் தனது சாதனையினை முறியடிக்க இன்னும் வாய்ப்புள்ளதாக லாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில்;

சீதோஷ்ணநிலை மிகப்பெரிய பங்கு வகித்ததால் அவுஸ்திரேலிய அணி அப்படி ஒரு முடிவை எடுத்தது. டேவிட் வோர்னர் 400 ஓட்டங்களை பெறும் வரை ஆட்டத்தை இடைநிறுத்தாது சென்றிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

தேனீர் இடைவேளைக்குள் 400 ரன்களை கடந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். இது சிறப்பானதாக இருந்திருக்கும்.

சேர் டொன் பிராட்மனின் சாதனையை முறியடித்ததும், எனது சாதனையை நோக்கி வார்னர் விரைவார் என்று விரும்பினேன். வர்ணனையாளர்கள் ஹெய்டன் சாதனையை முறியடிக்கலாம் எனக் கூறினர். ஆனால், 381 ரன்னைத் தொட்டால், என்னுடைய சாதனையை தொட்டுவிடுவார் என்று நினைத்தேன்’’ என்றார்.