ஐசிசி அறிமுகம் செய்துள்ள மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் ரிஷப் பண்ட்!

rishab56456 1554021341 1
rishab56456 1554021341 1

ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் விளாசினர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது.

இங்கிலாந்து அணி த​லைவர் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ரன்களும், 2-வது டெஸ்டில் 186 ரன்களும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்தது.

அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரையும் பரிந்துரை செய்தது.

இதில் ரிஷப் பண்ட் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீராங்கனைகளில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னீம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அறிமுகம் செய்துள்ள இந்த விருதை முதன்முறையாக வென்ற வீரர் என்ற பெமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

வோட்டிங் அகாடமி சிறந்த வீரரை தேர்வு செய்யும். வோட்டிங் அகாடமியில் மூத்த பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள், ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் உறுப்பினர்களில் சிலர் இடம் பிடித்துள்ளனர்.