பதவி விலகிய டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்!

CNl qLYI
CNl qLYI

டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் யோஷிரோ மோரி (வயது 83) தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

பெண்கள் தொடர்பில் அவர் பாலியல் ரீதியாக பரவலாக அவதூறாக முன்வைத்த கருத்துகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சீற்றத்தை தூண்டியதையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் யோஷிரோ மோரி தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

“எனது பொருத்தமற்ற கருத்துக்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி நான் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய விரும்புகிறேன்” என்று யோஷிரோ மோரி இன்று இடம்பெற்ற டோக்கியோ கவுன்சில் கூட்டத்தின்போது கூறியுள்ளார்.

மோரிக்கு பதிலாக ஜப்பான் கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பான் ஒலிம்பிக் மேயருமான சபுரோ கவாபுச்சி நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

84 வயதான கவாபுச்சி, 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பானை கால்பந்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் ஜப்பான் தென் கொரியாவுடன் 2002 ஃபிஃபா உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்த உதவியுமுள்ளார்.