எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இருபத்தைந்தாவது தெற்கு எலியகந்த மோட்டார் பந்தயம்!

nhgbpng
nhgbpng

இருபத்தைந்தாவது தெற்கு எலியகந்த மோட்டார் பந்தயம் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தெற்கு மோட்டார் விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனம் 25 ஆவது தெற்கு எலியகந்த மோட்டர் பந்தயத்தை அறிமுகம் செய்து வைக்கும் முகமாக இன்று (16.02.2021) ஸ்ரீலங்கா டெலிக்கொம் நிறுவன தலைமைக்காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

மாத்தறை பிரவுண்ஸ் ஹில் பகுதியில் இந்தப்பந்தயங்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் 16 மோட்டார் சைக்கிள் பந்தயங்களும் 17 மோட்டார் கார் பந்தயங்களும் இடம்பெறவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் அனைத்தும் 27 ஆம் திகதியும் கார் பந்தயங்கள் 28 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

600 மீற்றர் ஓட்ட தூரத்தை கொண்ட இந்தப்போட்டியில் அதிவேகமாக தூரத்தை கடக்கும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா கட்டுப்பாட்டுக்களுடன் இந்த பந்தயம் இடம்பெறவுள்ளமையால் அநேகமாக பார்வையாளர்களின்றியே இப்போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.