மேற்கிந்திய தீவுகளிற்கு இலகு வெற்றி

kohli william
kohli william

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந’தஜய அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தியா சார்பில் ஷிவம் டுபே 54 ஓட்டங்களையும், ரிஷப் பந்த் 33 ஓட்டங்களையும், விராட் கோலி 19 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் வில்லியம்ஸ், ஹைடன் வோல்ஸ் தலா 2 விக்கட்டுக்களையும், கொட்ரல், பெரி, கோல்டர், தலா ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை அடைந்தது.

லென்டில் சிம்மன்ஸ் 67 ஓட்டங்களையும், எவின் லூயில் 40 ஓட்டங்களையும், ஹெட்மையர் 23 ஓட்டங்களையும், பூரான் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக லென்டில் சிம்மன்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என சமநிலையிலுள்ளது. தொடரை தீர்மானிக்கின்ற 3வது T20 போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளது.