அணித் தலைவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டாரா? ரஷித்கான்.

download 7
download 7

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக அஸ்கர் ஆப்கான், நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அணித்தலைவராக இருந்த இளம் சுழல் நட்சத்திரமான ரஷீத்கானின், தலைமையில் திருப்தி இல்லாததன் காரணமாக அவர் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் முன்னாள் தலைவரான அஸ்கர் ஆப்கானே நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன், ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்கு இந்தியா சென்றது.

இதில் ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் தொடரையும், டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது. ரி-20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்நிலையில், ரஷித்கானை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அஸ்கர் ஆப்கானை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் நியமித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் குறுகிய நாட்களே இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மூன்று அணிகளுக்குமே தனித்தனி அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த நான்கு வருடங்களாக, ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக இருந்த அஸ்கர் ஆப்கான் அணியின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு சகலதுறை வீரரான குல்பதீன் நய்ப் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும். உலகக்கிண்ண தொடரில் படுமோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இறுதி இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால், அதிருபத்தி கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரஷித் கானை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .