யாழில் மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

ce5a550d 9e51 445a 986a 855699b34f85
ce5a550d 9e51 445a 986a 855699b34f85

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக மைத்தானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் பெண்கள் பிரிவில் கரவெட்டி பிரதேச செயலக பெண்கள் தெரிவு அணி முதலாம் இடத்தையும், கோப்பாய் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

ஆண்கள் பிரிவில், புத்தூர் வளர்மதி இளைஞர் கழக அணி முதலாம் இடத்தையும், தொண்டைமானாறு கலையரசி இளைஞர் கழக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இவ் நிகழ்விற்கு கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக திரு.ஶ்ரீரங்கேஸ்வரன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதியாக கோப்பாய் தொகுதி இணைப்பாளர் திரு. செல்வச்சந்திரன்,யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ரவி வர்மன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. வினோதினி ஶ்ரீமேனன் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.கிருபைராஜா, யாழ் மாவட்ட தேசிய சம்மேளன பிரதிநிதி உ.நிதர்சன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் செ.நிதர்சன் , மாவட்ட சம்மேளன உறுப்பினர்கள் , மற்றும் கோப்பாய் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இவ் சுற்றுப் போட்டிக்கு ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 06 அணிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.