அதிரடியில் மிரட்டும் தனஞ்சய டி சில்வா

dhana
dhana

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ்காக
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனஞ்சய டி சில்வாவின் அதிரடி சத்தத்தின் உதவியுடன் 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை ராவல்பிண்டியில் ஆரம்பமான இப்போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி முதலில் துடுபடத்தை தேர்வுசெய்தது அந்தவகையில் இலங்கை தமது முதல் இன்னிங்ஸ்காக முதல் இரண்டு நாற்களும் சிறப்பாக விளையாடியது .

எனினும் தொடர்ச்சியாக மழை குறுக்கிட்டமை காரணமாக மூன்றாம் நாள் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

அதேபோன்று நேற்றைய நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததால், ஒரு பந்துக் கூட வீசாத நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று முதல் இன்னிங்ஸ்காக ஆறு விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது.

சிறப்பாக விளையாடிய தனஞ்சய டி சில்வா சதத்தினை பதவு செய்திருந்தார்.

கடந்த 2009ஆம் இலங்கை அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற முதல் டெஸ்ட் தொடராக இந்த தொடர் காணப்படுகின்றது.

இந்தநிலையில் 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சதம் விளாசிய வீரராக தனஞ்சய டி சில்வா வரலாற்றில் தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.