சென்னை வீரர்கள் அனைவரும் வீடுதிரும்பிய பின்னரே நான் செல்வேன்! – தோனி

dhoni wins
dhoni wins

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ”சென்னை சுப்பர் கிங்ஸ் அணிவீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு திரும்புவேன்” என சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை காணொளி அழைப்புமூலம் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்களுடன் பேசிய தோனி, ”முதலில் வெளிநாட்டு வீரர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதன்பிறகு உள்ளூர் வீரர்கள் தங்கள் வீடுகளுக்குப் போகலாம்.

நமது அணியின் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்ற பிறகுதான் நான் ராஞ்சிக்கு செல்வேன்.
அதுவரை டெல்லியில்தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது அவர் டெல்லியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியில் உள்ள இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் வீடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்திருக்கிறது.

மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போய் சேர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இன்றுமாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.