இலங்கை அணி தைரியமாக விளையாட வேண்டும் – குசல் பெரேரா

5B0WC94z
5B0WC94z

இலங்கை அணி தனது நீண்டகால வெற்றிப் பாணியை இழந்துவிட்டதாகவும், அதை மீட்டெடுக்க அணி ‘தைரியமாக’ விளையாட வேண்டியது அவசியம் என்றும் குசல் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணியின் ஒருநாள் தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குசல் இளம் வீரர்களைக் கொண்ட அணியைப் பெற்றுள்ளார். அந்த அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸின் ஆதரவையும் குசல் இழந்துள்ளார்.

திமுத் கருணாரத்னவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குசல் பெரேரா இதன்போது மேலும் கூறுகையில்,

விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளில் 100 சதவீதம் கொடுக்க வேண்டும். நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற விரும்பினால் நாங்கள் ‘துணிச்சலான’ கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் தோல்வி பயத்தில் விளையாடினால் ஒரு போட்டியிலும் வெற்றிபெற முடியாது. நாம் தைரியமாக விளையாடினால் சில நேரங்களில் நிறைய விடயங்களை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறினார்.

மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி எதிர்வரும் 16 ஆம் திகதி பங்களாதேஷ் புறப்படும்.