நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர்!

image 2021 05 27 224312
image 2021 05 27 224312

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் பென் போக்ஸ் விலகியுள்ளார்.

ஓய்வறையில் இடம்பெற்ற விபத்தால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் பென் போக்ஸ்க்கு பதிலாக ஜேம்ஸ் பிரேசி இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

பென் போக்ஸிற்கு ஏற்பட்டுள்ள காயத்தால் சுமார் 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என அணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.