பாக்கிஸ்தான் அபார பந்துவீச்சு – தடுமாறும் இலங்கை

ef864bc59060695661191eaa2bd7ffb3 XL
ef864bc59060695661191eaa2bd7ffb3 XL

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்,இரண்டாம்நாள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றது .

கராச்சி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இதில் பாகிஸ்தான் அணிஅதிகபட்சமாக பாபர் அசாம் 60 ஓட்டங்களையும்அசாட் சபீக் 63ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, சற்று முன்னர் மதியநேர உணவுக்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை 6 இலக்குகளை இழந்து 170ஓட்டங்களை பெற்றுள்ளது

அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை அணி 21ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது இதேவேளை பாக்கிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அப்பாஸ் அலி மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .