இறுதிப் போட்டியை வென்றால் 1.6 மில். டொலர் பரிசு தொகை!

1623732388 kohli 2
1623732388 kohli 2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு – மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி (1.6 மில்லியன் டொலர்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு ரூ. 5.86 கோடி (800,000 டொலர்) கிடைக்கும். இறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.