இலங்கையுடன் மோதவுள்ள இந்திய அணி நாட்டை வந்தடைந்தது!

s3
s3

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஷீக்கர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

இதன்படி, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 13,15 மற்றும் 18ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், ஜூலை 21,23,25ஆம் திகதிகளில் இருபதுக்கு20 போட்டிகளும் இடம்பெற உள்ளன.