கிண்ணம் வென்றது_ இலங்கை இளையோர் அணி

EMWpOc2W4AA0HjZ
EMWpOc2W4AA0HjZ

முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் நவோத் பரணவிதான 108 ஓட்டங்களையும், காமில் மிஷார 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 266 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே 77 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை குறித்த போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணிகளுடன் மேற்கிந்திய தீவுகள்அணியும் பலப்பரிட்சை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .