மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகள் இலங்கையிலிருந்து சிம்பாப்வேக்கு மாற்றம்!

GettyImages 1291331257jpg
GettyImages 1291331257jpg

2022 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களைத் தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டி இந்த ஆண்டு இறுதியில் சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது.

பத்து அணிகள் கொண்ட போட்டி நவம்பர் 21 முதல் டிசம்பர் 5 வரை ஹராரேயில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தகுதிகாண் போட்டிகள் ஆரம்பத்தில் 2020 யூலையில் இலங்கையில் நடைபெறவிருந்தன. எனினும் கொவிட் -19 தொற்றுநோய் உள்ளிட்ட பிற காரணிகளினால் அது ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று இடங்களுக்காக போட்டியிடும் பத்து அணிகள் 5 அணிகள் மகளிர் ஒருநாள் அந்தஸ்து கொண்ட அணிகளாகும்.

போட்டிகளுக்கான அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளே தகுதிகாண் போட்டிகளில் மோதும்.

தகுதிகாண் போட்டிகளில் வெல்லும் அணிகள் உலகக் கிண்ணத்துக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து அணிகளுடன் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.