உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி மற்றுமொரு தொடரில் பங்கேற்பு!

spt01
spt01

இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம், இருபது20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஓமானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்தத் தொடர் இடம்பெறும் என ஓமான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில், இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் இரண்டு இருபது 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்தத் தொடரை அடுத்து, இருபது 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி, ஐக்கிய இரபு இராச்சியத்துக்கு பயணிக்க உள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.