சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹசிம் அம்லா

Hashim 1
Hashim 1

36 வயதுடைய ஹஷிம் அம்லா வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆயினும் அம்லா தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 சதங்களுடன் 9,282 ரன்களை குவித்துள்ளார்.

முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரும் இவர்தான். 2012ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ரன்களை அம்லா நடித்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அணித் தலைவராக விளங்கிய ஹசிம் ஆம்லா, 2014 முதல் 2016 டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார்.

எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ந்து பார்க்கும்போது, ஹசிம் ஆம்லா 349 போட்டிகளில் பங்கேற்று 55 சதங்களுடன் 18,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 27 சதங்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த செவ்வாயன்று தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்குப் பிறகு தனது சர்வதேச வாழ்க்கையை முடித்த இரண்டாவது சிறந்த தென்னாப்பிரிக்க வீரர் அம்லா ஆவார்.