அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அண்டி முரே தோல்வி!

murrey
murrey

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிரித்தானியாவின் அண்டி முரே, கிரீஸின் ஸ்டெப்னோஸ் சிட்சிபாஸிடம் தோல்வியடைந்தார்.

நேற்று ஆரம்பமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் நியூயார்க்கில் குறித்த போட்டி இடம்பெற்றது.

இதில், 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முரேயை வீழ்த்திய ஸ்டெப்னோஸ் சிட்சிபாஸ், இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.