சிட்னி சிக்ஸர்ஸ் அணியிடம் வீழ்ந்தது பெர்த் ஸ்கொர்சர்ஸ்

201801032310526735 Big Bash League Melbourne Renegades beat Sydney Sixers by 8 SECVPF
201801032310526735 Big Bash League Melbourne Renegades beat Sydney Sixers by 8 SECVPF

பிக் பேஷ் இருபதுக்கு இருபது தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 3 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சட்சன், மெத்தியு கெலி, அஸ்டன் அகர் மற்றும் பவாட் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியால், 18.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜெக்ஸன் பேர்ட் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பென் துவார்ஷூயிஸ் 2 விக்கெட்டுகளையும், டொம் கர்ரன் மற்றும் லோய்ட் போப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.