போட்டியை ரத்து செய்வதற்கு பதிலாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றியிருக்கலாம் – மைக்கேல் வோகன்

Michael Vaughan
Michael Vaughan

இறுதி தருணத்தில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியை நியூசிலாந்து அணி ரத்து செய்தமைக்கு பதிலாக, போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றியிருக்கலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போட்டியை நியூசிலாந்து அணி அண்மையில் ரத்து செய்திருந்தது.

இதற்கிடையில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதுகாப்பற்றதென எண்ணினால் போட்டி தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் தெரிவித்துள்ளார்.