லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி!

lpl 2
lpl 2

லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளை நேரில் பார்வையிட கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, விளையாட்டரங்கில் 25 சதவீதமானோரை அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியாகாத நிலையில், அவ்வாறு ரசிகர்களை அனுமதிப்பதாயின் இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசெம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.