சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

sunrisers hyderabad03 1599408819 1
sunrisers hyderabad03 1599408819 1

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிவருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 84 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 236 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட உள்ளது.