இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் களமிறங்கும் அணிகள்

T20 WC general ICC Logo 571 855
T20 WC general ICC Logo 571 855

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கான முழுமையான அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய குழு 1 இல், இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குழு 2 இல், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

அதற்கமைய முதலாம் சுற்றின் குழு (ஏ) இலிருந்து இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

அதேபோல குழு (பி)இலிருந்து ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.