ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்!

unnamed 8
unnamed 8

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கெடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஆண்கள் ஆஷஸ் சுற்றுப் பயணத்துக்காக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறுவார்.

பென் ஸ்டோக்ஸுக்கு அவரது ஆலோசகர் மற்றும் மருத்துவக் குழுவினால் எலும்பு முறிந்த இடது ஆள்காட்டி விரலில் அவரது இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயிற்சியைத் தொடர அனைத்து தெளிவும் கொடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து தனது முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை டிசம்பர் 8 ஆம் திகதி பிரிஸ்பேனில் விளையாடவுள்ளது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் தனது சக வீரர்களுடன் நவம்பர் 4 ஆம் திகதி அவுஸ்திரேலியா புறப்படுவார்.