மேற்கிந்தியத்தீவுகளை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

329304
329304

தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.

தத்தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை இலக்குவைத்து விளையாடிய இந்த இரண்டு அணிகளில் தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது.

ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சு, ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.