உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இன்றைய போட்டிகள்!

World Cup 1
World Cup 1

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இன்றைய முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று(28) பிற்பகல் 3.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு டுபாயில் இடம்பெறவுள்ளது.