எல்.பி.எல் வீரர்கள் தெரிவு தொலைக்காணொளி ஊடாக முன்னெடுப்பு!

lpl 1
lpl 1

இரண்டாவது லங்கா ப்றீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான, வீரர்கள் தெரிவு தொலைகாணொளி ஊடாக இன்று இடம்பெறுகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடாக இதற்கான கண்காணிப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

கிறிஸ் கெய்ல், இர்ஃபான் பதான், பஃப் டு ப்ளசிஸ், ஷஹீட் அப்ரிடி உள்ளிட்ட 300 சர்வதேச வீரர்கள் அடங்கலாக 600 வீரர்கள் இதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல், 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.