மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணிக்கு 46 ஓட்டங்கள்!

srilanka worldcup jersey
srilanka worldcup jersey

சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடும் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 70 ஓட்டங்கள் வழங்கி 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்று கொண்டது.