ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஹசரங்கவும் பரிந்துரை!

ICC AWARDS Mens T20
ICC AWARDS Mens T20

2021 ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் பந்துரைக்கப்பட்ட நான்கு வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார்.

குறித்த விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இரண்டு சிறந்த விக்கெட் காப்பாளர்-பேட்ஸ்மன்களும், இரண்டு சகலதுறை ஆட்டக்காரர்களும் உள்ளனர்.

அதன்படி இங்கிலாந்து ஜோஸ் பட்லர், இலங்கையின் வனந்து ஹசரங்க, அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் 2021 ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆவர்.

இவ்வாண்டில் மொத்தமாக 20 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்க மொத்தமாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

துடுப்பாட்டத்திலும் அவர் ஒரு அரை சதத்துடன் 196 ஓட்டங்களை குவித்துள்ளார்.

வனிந்து ஹசரங்கவிற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டாகும், அவர் டி-20 கிரிக்கெட் அரங்கில் சிறந்த பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் துடுப்பாட்டத்திலும் சிறந்த ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார்.

டி-20 அரங்கில் இவ்வாண்டு சிறந்த விளங்கிய ஹசரங்கவின் சாதனை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தின் போது உச்ச நிலையினை எட்டியது. 

24 வயதேயான ஹசரங்க இலங்கை கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார்.