சுற்றுலா சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று(16) நடைபெறவுள்ளது.
பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐசிசி சுப்பர் லீக் தொடரில் இலங்கை முன்னேறுவதற்கு இந்தப் போட்டி முக்கியமானது.
முதல் எட்டு அணிகள் மட்டுமே அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.
குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிம்பாப்வே போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்.