முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

1644582437 sl 2
1644582437 sl 2

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் ஹசில்வூட் 4 விக்கெட்களையும் அடம் சம்பா 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.