அதிக தொகைக்கு ஏலம் போன ஷேன் வோர்னின் தொப்பி!

sharn warn
sharn warn

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி சேகரிக்கும் முகமாக ஷேன் வோர்ன் தான் அணிந்து விளையாடிய தொப்பியை ஏலத்தில் விட்டிருந்தார்.

அதன்படி ஷேன் வோர்ன் அணிந்து விளையாடிய தொப்பியை இரசிகர் ஒருவர் ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டதில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டதில் இதுவே சாதனைத் தொகையாகும்.

இதற்கு முன்பு 2003-ம் ஆண்டில் அஸ்ரேரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரட்மன் டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்திய தொப்பி ரூ.3 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இதுவரை காலமும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.