மேற்கிந்திய தீவுகள் திரில் வெற்றி!

wi vs ire
wi vs ire

மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அயர்லாந்து சார்பில் ஸ்டெர்லிங் 63 ஓட்டங்களையும், கெவின் ஓ பிரைன் 31 ஓட்டங்களையும், சிமி சிங் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் நிக்கலஸ் பூரன் 52 ஓட்டங்களையும், பொல்லார்டு 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன் வெற்றி இலக்கினை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி சற்று தடுமாறிய போதிலும் 11 வது வீரராக களமிறங்கி ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றி பெற வைப்பது இதுவே முதல் தடவை ஆகும்.