பாகிஸ்தான் அணிக்கெதிரான பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு!

cricket sri ban 703b10ec 088e 11e7 814d 775bded0c5ff
cricket sri ban 703b10ec 088e 11e7 814d 775bded0c5ff

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், விளையாடும் மாற்றம் கலந்த பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

14பேர் கொண்ட இந்த அணியில், அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டமீம் இக்பால் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர், மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

இதுதவிர, பந்துவீச்சு சகலதுறை வீரரான மெயிடி ஹசன், விரலில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

மேலும், அண்மைக்காலமாக சோபிக்க தவறிவரும் முஸ்தாபிஸூர் ரஹ்மான், இம்ருல் கைஸ் மற்றும் மொசாடெக் ஹொசைன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

மொமினுல் ஹக் தலைமையிலான அணியில், டமீம் இக்பால், சய்ப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொஹமதுல்லா, மொஹமட் மிதுன், லிடொன் தாஸ். தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், எபொடட் ஹொசைன், அபு ஜெயிட், சௌத்ரி ராஹி, அல் அமீன் ஹொசைன், ரூபெல் ஹொசைன், சௌமியா சர்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றது.