டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை – கபில்தேவ்

post image 0313049 1280x720
post image 0313049 1280x720

நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாக தான் கருதவில்லை என கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக ஐசிசியின் மூன்று கோப்பைகளை வென்று பெருமை தேடித்தந்த முன்னாள் கேப்டன் டோனி, உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர், எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

இதனால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதவில்லை.

ஆனால் அவரிடம் இன்னும் ஐபிஎல் இருக்கிறது. அந்த வடிவம் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். அப்போது தேர்வுக்குழுவினர் தேசிய அணிக்கு எது முக்கியம் என்பதை பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், “தோனி நாட்டிற்காக நிறைய செய்திருக்கிறார், ஆனால் நீங்கள் 6-7 மாதங்கள் விளையாடாதபோது, அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள். பின்னர் அது நடக்கக்கூடாது என்று நிறைய விவாதங்களை உருவாக்குகிறது.” என தெரிவித்துள்ளார்.