அவர் விசேட திறமையுள்ள வீரர் – சச்சின்

download 4 2
download 4 2

அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் மார்னஸ் லாபுசாக்னே தன்னை நினைவுபடுத்துபவராக காணப்படுகின்றார் என இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களிற்காக நிதி திரட்டுவதற்காக இடம்பெறும் போட்டிகளில் விளையாடும் அணிகளிற்கு பயிற்சிஅளிப்பதற்காக அங்கு சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காணப்பட்டது போன்று தற்போது காணப்படும் வீரர் யார் என சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்டினை நான் பார்த்தேன், ஸடீவ் ஸமித் ஆட்டமிழந்த பின்னர் மார்னஸ் லாபுசாக்னேயின் இனிங்சை நான் அவதானித்தேன்.

அவுஸ்திரேலிய அணியின் அந்த இளம் வீரர் விசேட திறமையுடையவர் போல தோன்றினார் எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவரிடம் ஏதோ ஒன்றுள்ளது, அவர் தனது பாதங்களை சிறப்பாக பயன்படுத்துகின்றார். கால்களை பயன்படுத்துவது உடலுடன் தொடர்புபட்டதல்ல மனதுடன் தொடர்புபட்டது.

நீங்கள் சாதகமாக சிந்திக்காவிட்டால் உங்களால் பாதங்களை சரியாக பயன்படுத்த முடியாது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் விராட் கோலியா, ஸ்டீவ் ஸ்மித்தா தலைசிறந்தவர் என்ற விவாதத்தில் சிக்குவதற்கு சச்சின் மறுத்துள்ளார்.

நான் ஒப்பீடுகளை விரும்புவதில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒப்பிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என நான் தெரிவித்துள்ளேன் என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.