மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோ ரூட்டின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ள நிலையில், ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் வைத்தியசாலையில் இருந்து திரும்பும் பட்சத்தில் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு, தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுக்கும் ஜோ ரூட், எதிர்வரும் 16ம் திகதி ஓல்ட் ட்ரெபோர்டில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைக்கப்படுவார்.
இவர் குறித்த போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னர் குழாத்துடன் இணைந்துக்கொள்வார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.