வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பாதுகாப்பை இழந்தது போல உணர்ந்தேன்:ராகுல் டிராவிட்

images 9
images 9

ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது தனது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சில கட்டங்களில் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்திருக்கிறேன்.

1998-ல் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். ஓராண்டு அணியில் இடம்பெறாமல் மீண்டும் போராடிதான் அணிக்குள் நுழைய முடிந்தது.

ஒரு டெஸ்ட் வீரராகவே பயிற்சியளிக்கப்பட்டு வளர்ந்த நான், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நான் சரிப்பட்டு வருவேனா என்பது போன்ற பாதுகாப்பற்ற நிலை இருந்தது. அதாவது பந்தை தரையில்தான் ஆட வேண்டும், தூக்கிஅடிக்கக் கூடாது என்று வளர்க்கப்பட்டவன் நான்.

இதனால் ஒருநாள் போட்டிகளில் சோபிக்க முடியுமளவுக்கு திறமை நம்மிடம் இருக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்தன என கூறினார் டிராவிட்.

அதே சமயம் மீண்டும் வந்து ஒருநாள் போட்டிகளிலும் தன்னை நிலை நிறுத்தினார், குறிப்பாக 1999 உலகக்கோப்பைத் தொடரில் 461 ரன்களை 65.85 என்ற சராசரியில் எடுத்தது அவருக்கு ஒரு பெரிய தொடராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.